1. தான் 'கவுரவ' வேடத்தில் நடித்த குசேலன் படத்தின் வியாபாரத்தின்போதே, ரஜினியே விநியோகஸ்தர்களிடம் "அதிகமா விலை கொடுத்துடாதீங்க' என்று எச்சரித்திருக்கிறார். "பேராசைக்காரர்களான" விநியோகஸ்தர்களின் காதில் ரஜினியின் எச்சரிக்கை "செவிடன் காதில் ஊதிய சங்கு" போல் ஆனது.
பேராசை
2. "பேராசைக்காரர்களான" குசேலன் தயாரிப்பாளர்கள், ரஜினியின் எச்சரிக்கையை மீறி, குசேலன் ஒரு முழு மூச்சான ரஜினி படம் என்பது போல், சீன் காட்டி, அதனை பல கோடி ரூபாய்களுக்கு மொத்தமாக "பிரமிட் சாய்மீரா" என்ற குழுமத்திற்கு விற்று விட்டனர்.
காற்றோட போச்சு
3. 'பிரமிட்' குழுமம் தான் வாங்கிய வானளாவிய தொகைக்குமேல் குசேலன் படத்தை விற்றால்தான் லாபம் பார்க்க முடியும் என்ற நிலைமையில், அதனை மிக அதிக தொகைக்கு எல்லா ஏரியாக்களிலும் விற்றது. வாங்கிய விநியோகஸ்தர்களும், முதல் பாராவில் கூறியபடி ரஜினியின் எச்சரிக்கையை காதில் வாங்காமல், காற்றில் விட்டுவிட்டு பின்பு அவஸ்தை பட்டனர்.
மீடியாவின் வெறியாட்டம்
4. குசேலன் படமும் வெளியாகி, ரஜினி கன்னட வெறியர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டார் என்ற பொய் பிரசாரத்தில் சிக்கி, ரசிகர்களையும் சிறிது தடுமாற வைத்து விட்டது. இதனை சாக்காக வைத்து, தமிழ் மீடியாவுடன் சேர்ந்துகொண்டு விநியோகஸ்தர்கள் குசேலனுக்கு எதிராக கொடி பிடிக்க தொடங்கினர்.
ஞானி சாணியான கதை
5. "எதுடா சாக்கு, ரஜினியை பலி கடா ஆக்கலாம்" என்று காத்திருந்த ஞானிகளுக்கும், சானிகளுக்கும், 'வெறும் வாய்க்கு அவல்' கிடைத்தது போல் ஆயிற்று. ரஜினியையும், குசேலனையும் அதன் வியாபாரத்தையும் போட்டு கண்டபடி தாக்கினர் - உண்மை என்ன என்று தெரியாமலேயே அல்லது தெரிந்துகொள்ள விரும்பாமலேயே.
குசேலன் பிரச்னை உலகின் மிகப்பெரிய பிரச்னை
6. மீடியாக்கள் செய்த அட்டகாசத்தால், அப்போது தமிழ்நாட்டில் வேறு பிரச்னைகளே இல்லாதது போன்ற ஒரு தோற்றம் உருவாயிற்று. அமெரிக்காவுக்கும், உலகத்திற்கும், 160 ஆண்டுகள் வியாபாரம் செய்து ஒரே ஆண்டில் ஓட்டாண்டி ஆன "Lehmann Brothers" திவால் ஆனது பெரிய செய்தி ஆக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மீடியாவுக்கோ ரஜினியும், அவர் கேட்காத மன்னிப்பும் மற்றும் குசேலன் படம் அதிக விலைக்கு வியாபாரம் ஆனதும் அதனால் விநியோகஸ்தர்கள் சிலர் நஷ்டம் அடைந்ததும்தான் செய்தி. 'ரஜினி' என்ற மந்திர சொல் பத்திரிகை வியாபாரத்திற்கு பயன்படுவதுபோல், திரைதுரைக்கே பயன்பட்டிருக்காதோ என்று என்ன தோன்றுகிறது.
கல்நெஞ்சம்
7. வெளி உலகத்திற்கு வேண்டுமானால் ரஜினி கூறியதற்கு மாறாக மற்ற அனைவரும் குசேலன் வியாபாரத்தில் செயல்பட்டனர் என்று தெரியாமல் இருக்கலாம். அனால், சம்பந்தப்பட்ட அனைவரும் இதனை அறிந்திருந்தும், அதனால் பயன் அடைந்திருந்தும்கூட, ஒருவரும் "இதில ரஜினிக்கு சம்பந்தம் இல்லை;அப்படியே இருந்திருந்தாலும், அவர் சொன்னபடி நாங்கள் செய்திருந்தால் இந்த நிலைமையே வந்திருக்காது" என்று கூறவே இல்லையே. என்னே கல்நெஞ்சுக்காரர்கள்?
உண்மையான ஞானி இதோ
8. தமிழ் மீடியாக்கள் தன்னை ஏதோ கொலை குற்றம் புரிந்தவன் போல் சித்தரித்திருந்தாலும் கூட, இதனால் நன்மை அடைந்தவர்கள் ஒருவரும் உண்மையை உலகத்திற்கு தெளிவாக்காவிட்டாலும்கூட, ரஜினி என்ற அந்த மாமனிதன் தானே முன்னின்று, தன்னுடைய அறிவுரையை நிராகரித்துவிட்டு வம்பில் மாட்டிக்கொண்ட விநியோகஸ்தர்களை ஒரு தாயை போல அரவணைக்க முற்பட்டு, தனக்கு இதில சம்பந்தம் இல்லாவிடினும்கூட, அவர்களின் நஷ்டத்தில் ஒருபகுதியை தானே ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு கோடிக்கணக்கில் கொட்டிகொடுத்தபின்புதான், ஓநாய்களின் ஓலம் அடங்கியது.
இதைபோன்ற செயல்கள்தான், ஒருவனை மனிதன் என்ற நிலையிலிருந்து 'மாமனிதன்' என்ற அந்தஸ்திற்கு கொண்டு சேர்க்கிறது.
Supremely Self-Confident
ரஜினியை தவிர, வேறு யார் தன்னுடைய படத்தையே அதிக விலை கொடுத்து வாங்காதே என்று முன்கூட்டியே எச்சரிப்பார்கள்? அவனவன், வந்த வரைக்கும் லாபம் என்று சுருட்டிக்கொண்டு ஓடியிருப்பான். அவங்களுக்கு படம் விற்று போனதே பெரிய சாதனை, இதில எங்கே அதிக விலை கொடுத்து வாங்காதே என்றெல்லாம் சொல்வது?
மேலான நிலை
ரஜினியைதவிர வேறு யார் இவ்வாறு தன் பெயர், தான் செய்யாத தவறினால் கெடுக்கப்படும்போதும் பார்த்துக்கொண்டு மெளனமாக இருப்பார்கள்? உடனே, சம்பந்தப்பட்டவர்களை போட்டு காய்ச்சி எடுத்து, தன் பேரை மட்டும் 'ரிப்பேர்' செய்துகொண்டு இருக்க மாட்டார்களா? ரஜினி மட்டுமே, தன் பேரை காவு கொடுத்தாவது தான் மதிப்பவர்கள் பெயர் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய உள்ளம் படைத்தவர். அதனால்தான், அந்த 'மாமனிதன்' தமிழ் மீடியாவின் தரம் குறைந்த விளையாட்டுக்கு ஒரு பதிலும் கொடுக்காமல் மௌனம் காத்து, மற்றவர் மானம் காத்தான்.
கலியுக கர்ணன் இதோ
ரஜினியை தவிர வேறு யார், தன்னுடைய கைகாசை போட்டு, விநியோகஸ்தர்களின் நஷ்டத்தை ஈடு கட்டி இருப்பார்? மற்ற அனைவரும், மீடியாவின் ஆட்டத்தால், 'துண்ட காணோம், துணிய காணோம்' என்று ஓட்டம் அல்லவா எடுத்திருப்பர்?
மனமே பிரதானம்
இப்போது சொல்லுங்கள், திரு. ராம. நாராயணன் கூறியபடி, ரஜினி என்பவர், "மனிதருள் மாணிக்கம்" என்ற பட்டத்திற்கு தகுதியானவர்தான் இல்லையா? மேலும், மேலும் பணமே பிரதானம் என்று வாழ்க்கையை ஓட்டும் மனிதர்கள் நிரம்பிய இக்காலத்தில், 'மனத்திற்கு' மட்டுமே பிரதான இடம் கொடுத்து, 'பணத்தை' துச்சமாக மதிக்கும் மனிதனுக்கே 'மனிதருள் மாணிக்கம்' என்ற பட்டம் மிகவும் பொருத்தம்.
மனித உருவில் மிருகங்கள்
இப்படிப்பட்ட மனிதர்களையும் கூட, மொழி மற்றும் மற்ற பிராந்திய வேறுபாட்டால் பிரித்து பார்க்க துடிக்கும் மனிதர்களையும், கல் நெஞ்சக்காரர்களையும் "மனித உருவில் உலவும் மிருகங்கள்" என்று சொன்னால் தவறில்லைதானே? (உண்மையான) மிருகங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.