1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
மறந்து போச்சு.
1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
மறந்து போச்சு.
1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?
மறந்து போச்சு.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
குசேலன். மூன்றாவது முறை.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சந்தோஷ் சுப்ரமணியன். வீட்டில். மிகவும் பிடித்திருந்தது.
அந்த வாரமே குடும்பத்துடன் சென்று அதே படத்தை அரங்கத்தில் பார்த்து ரசித்தோம்.
4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
பல உண்டு. சமீபமாக அந்நியன். படத்தை பார்த்துவிட்டு வந்து இணையத்தில் கருட புராணத்தை தேடி பிடித்து பாவ செயல்களும் அதற்கு உரிய தண்டனைகளும் பற்றி படித்து அறிந்து கொண்ட பிறகுதான் ஒரு நிலைக்கு வந்தேன்.
அந்நியன் "Tell Me your Dreams" கதையின் கருவை சாமர்த்தியமாக காப்பி அடித்து எடுக்க பட்ட ஒரு படம் என்றாலும், ஒரு தீவிரமான மற்றும் பயங்கரமான மூளை வியாதியினால் சிலசமயம் நன்மை கூட விளையலாம் என்று நம்பிக்கை கொடுத்த படம்.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல்சம்பவம்?
பாபா படத்தை பா. ம. க. கட்சி ரவுடிகள் மக்கள் பார்க்க விடாமல் ரவுடித்தனம் செய்தது. என் ரத்தத்தை மிகவும் கொதிக்க வைத்து. அதன் தாக்கம் இரண்டே மாதங்களில் வெளிப்பட்டது. எனக்கு அதிக ரத்த கொதிப்பு இருப்பதாக மருத்துவர் கண்டுபிடித்து தெரிவித்தார்.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா -தொழில்நுட்ப சம்பவம்?
முதல்முறை சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் ஸ்ரீதேவி உடன் காரில் அவர் வீட்டிற்கு வரும்போது தெரு மரங்களின் நிழல் கார் கண்ணாடியில் நகரும் அழகில் மயங்கினேன். நிவாஸ் அவர்களின் கேமரா பதிவு. பின்பு முள்ளும் மலரும் பாலு மகேந்திரா அவர்களின் கேமரா ஜாலம். நெஞ்சத்தை கிள்ளாதே வில் அசோக் குமார் அவர்களின் சூப்பர் கேமரா வேலை.
சிக்கு புக்கு ரயிலே மற்றும் முக்காலா முக்காபுலா பாடல்களுக்கு ஷங்கர் அமைத்த கிராபிக்ஸ் சித்து விளையாட்டுக்கள். ஜீன்ஸ் படத்தில் இரண்டு பிரஷாந்த் மற்றும் இரண்டு நாசர் பாத்திரங்களை வெவ்வேறு பாத்திரங்கள் என்றே நம்ப வைத்த இரட்டை வேடப்படங்களின் உச்சகட்ட கிராபிக்ஸ் கலக்கல்.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
உண்டு. வலை தளங்களில்.
7. தமிழ்ச்சினிமா இசை?
மெருகேறிக்கொண்டே இருக்கிறது. எம். எஸ். வீ. அவர்களின் ரசிகன். A.R.ரஹ்மான் அவர்களின் இசையும் பிடிக்கும். ஒரே குறை - இன்றைய இசையில் மெலடி குறைந்து கொண்டே போகிறது.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமாபார்ப்பதுண்டா? அதிகம்தாக்கிய படங்கள்?
முன்பு இல்லை. லகான்க்கு பிறகு ஹிந்தி படங்களின் மீது ஒரு மரியாதை வந்தது. ஆமிர் கான் பிடித்த நடிகர். அவரின் Tare Zameen Par என்னை மிகவும் கவர்ந்த படம். அவ்வப்போது தெலுங்கு படங்களும் பார்பதுண்டு. வெங்கடேஷ் பிடித்த நடிகர். ஆங்கிலத்தில் ஆக்ஷன் மற்றும் சஸ்பென்ஸ் படங்கள் பிடிக்கும்.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும்செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை. என் தந்தை மற்றும் பெரியப்பா அவர்களுக்கு தொடர்பு இருந்தது. அவர்கள் மறைவுக்கு பிறகு அது விட்டு போனது.
10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்னநினைக்கிறீர்கள்?
இந்திய சினிமாவுக்கே மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும்சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமேபத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்டஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்?உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும்என்று நினைக்கிறீர்கள்?
தலைவர் ரஜினி படத்தை மட்டும் தான் நான் எப்பொழுதும் ஆர்வத்துடன் எதிர் பார்க்கிறேன் என்பதனால் எனக்கு ஒரு வருடம் போவதே தெரியாது.
திருட்டு VCD தமிழர்களின் முழு நேர பொழுது போக்காக மாறி விடும். டிவி யில் அழுகை தொடர்களும் பெருகி விடும்.
என் வலைத்தளத்துக்கு வருகை தரும் அனைவரையும் இதனை தொடருமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
2 comments:
அருண்,
தொடர்ந்ததற்கு மிக்க நன்றி. தலைவர் அரசியலுக்கு வந்தால், பல பேர் நம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் வண்ணம் பேசவும், நடந்துகொள்ளவும் காத்திருக்கிறார்கள்...
// தலைவர் ரஜினி படத்தை மட்டும் தான் நான் எப்பொழுதும் ஆர்வத்துடன் எதிர் பார்க்கிறேன் என்பதனால் எனக்கு ** ஒரு வருடம் போவதே தெரியாது**. //
cool
EE RAA
Post a Comment