Tuesday, August 11, 2009

மனிதருள் மாணிக்கமும், மனித உருவில் மிருகங்களும்


சமீபத்தில், டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஈரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தலைமையில் நடந்தது. அதில், வழக்கம் போலவே தலைவர் தனது சூப்பரான பேச்சினால் அனைவரையும் கவர்ந்தார்.

அதில், வழக்கம் போலவே தமிழ் கலாச்சாரப்படி யார் தலைமையில் விழா நடக்கிறதோ, அவர்களை ஒரேயடியாக 'ஐஸ்' மழையில் நனைய வைத்து ஒரே தூக்காக தூக்கி விடுவதும் நடந்தது.

மனிதரில் மாணிக்கம் ரஜினி

அதில் ஒன்றுதான் தமிழ் திரைப்பட சங்கத்தின் தலைவர் ராம. நாராயணன் அவர்கள் பேசியது. அது இதோ:

"நமது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கலைஞர்களிலே மிகச் சிறந்த நடிகர்… நடிகர்களிலே மிகச் சிறந்த மனிதர்… மனிதர்களிலே அவர் ஒரு மாணிக்கம்… இது அவருடன் பழகிய எல்லோரும் புரிந்து கொண்ட உண்மை. அவரால் நமது மண்ணுக்கே பெருமை".

'மனிதரில் மாணிக்கம்' - முன்னாள் பாரத பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவர்களைத்தான் இந்த பட்ட பெயருடன் அழைப்பார்கள். இப்போது தலைவருக்கும் அதே பட்டப்பெயரையே திரு. ராம. நாராயணன் அவர்கள் அளித்திருக்கிறார்.

பொருத்தம்

For a change, இந்த பட்டப்பெயர், தலைவருக்கு மிகவும் பொருந்தி இருக்கிறது. வேறு முறையில் சொல்வதானால், இந்த பட்டப்பெயருக்கு இன்றைய கால கட்டத்தில் முழு முதல் தகுதி இருப்பது தலைவருக்கு மட்டும்தான். அதற்கு தன்னை முழுவதும் அவர் தகுதி ஆக்கி கொண்டுவிட்டார். எப்படி என்று கேட்பவர்களுக்கு விடையும்,அந்த விழாவிலேயே கிடைத்து விட்டது.

அப்ரூவர்

தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. கலைபுலி ஜி. சேகரன் பேசியதில் முக்கியமானது இது:

''நம் அன்பு அண்ணன் சூப்பர் ஸ்டார் அவர்கள் எப்போதும் தயாரிப்பாளர்கள் -விநியோகஸ்தர்களின் பக்கம் நிற்பவர். அந்த நல்ல மனசு அவருக்கு இருப்பதாலேயே, கடந்த முறை நாங்கள் குசேலனை வாங்கியபோது, ஒரு முறைக்கு இரு முறை, 'பார்த்து விலைகொடுங்க… அதிகமா கொடுத்துடாதீங்க’ என விநியோகஸ்தர்களையெல்லாம் அவர் எச்சரித்தார்.

அதையும் தாண்டி, சில பேராசைக்காரர்களின் சூழ்ச்சியால் நாங்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய சூழல். ஆனால் நமது சூப்பர் ஸ்டார், தானே முன்நின்று இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்தார். அவரது நல்ல மனசைப் புரிந்து கொண்டு நாமும் அவருக்கு ஒத்துழைத்தோம். இவரால் யாருக்குமே நஷ்டம் வராது… வர விட மாட்டார் என்பதற்கு இது ஒரு சான்று…". Sabaash, now, the cat is out of the bag.

குசேலன் பிரச்னையின்போது மற்றொரு மீடியா பொய்யும் வெட்ட வெளிச்சமானது. அப்போது போர்க்கொடி தூக்கி இருந்த விநியோகஸ்தர்கள் அனைவரும், 'பாபா' படத்தின்போது தாங்கள் லாபம் கண்டதாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். அதற்கும் ரஜினியே காரணம் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மீடியாவின் கொலைவெறி

'குசேலன்' பட வெளியீட்டின்போது ரஜினியின் 'கேட்காத மன்னிப்பை' காரணம் காட்டி, அப்படத்தை ஓடவிடாமல் பிரச்சாரம் செய்து விட்டு அதனால் விநியோகஸ்தர்களும், திரை அரங்கங்களும் அதிக விலை கொடுத்து நஷ்டம் அடைந்து விட்டனர் என்று எப்படி எல்லாம் பிரச்சாரம் செய்தனர்? ஞானிகளும், சாணிகளும் ரஜினி என்ற மனிதரை எப்படி எல்லாம் சேற்றை வாரி தூற்றினர்? 'சன்'களும், 'விகடன்'களும் எப்படி எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு ஏதோ அவர்களுடைய கைக்காசை போட்டு குசலனை வாங்கி நஷ்டம் அடைந்ததை போன்று ஓலமிட்டன? 'ரஜினி'யை பற்றி எப்படி தேவையே இல்லாமல் 'சர்வே' எல்லாம் நடத்தி அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துவிட்டது போன்ற தோற்றம் உண்டாக்க முயற்சித்தனர்?

இப்போது, 'ஈரம்' பட இசை வெளியீட்டு விழாவில், ஒரு விநியோகஸ்தர் 'வாக்குமூலம்' கொடுத்து 'அப்ரூவர்' ஆக மாறிவிட்டாரே, இப்போது இந்த ஞானிகளும், சாணிகளும், 'சன்'களும், 'விகடன்'களும் எங்கே போய் தங்கள் முகத்தை காட்டுவார்கள்?

வாக்குமூலம் இப்போது தெளிவாக்கி இருப்பது இதைத்தான்:

ரஜினியின் எச்சரிக்கை

1. தான் 'கவுரவ' வேடத்தில் நடித்த குசேலன் படத்தின் வியாபாரத்தின்போதே, ரஜினியே விநியோகஸ்தர்களிடம் "அதிகமா விலை கொடுத்துடாதீங்க' என்று எச்சரித்திருக்கிறார். "பேராசைக்காரர்களான" விநியோகஸ்தர்களின் காதில் ரஜினியின் எச்சரிக்கை "செவிடன் காதில் ஊதிய சங்கு" போல் ஆனது.

பேராசை

2. "பேராசைக்காரர்களான" குசேலன் தயாரிப்பாளர்கள், ரஜினியின் எச்சரிக்கையை மீறி, குசேலன் ஒரு முழு மூச்சான ரஜினி படம் என்பது போல், சீன் காட்டி, அதனை பல கோடி ரூபாய்களுக்கு மொத்தமாக "பிரமிட் சாய்மீரா" என்ற குழுமத்திற்கு விற்று விட்டனர்.

காற்றோட போச்சு

3. 'பிரமிட்' குழுமம் தான் வாங்கிய வானளாவிய தொகைக்குமேல் குசேலன் படத்தை விற்றால்தான் லாபம் பார்க்க முடியும் என்ற நிலைமையில், அதனை மிக அதிக தொகைக்கு எல்லா ஏரியாக்களிலும் விற்றது. வாங்கிய விநியோகஸ்தர்களும், முதல் பாராவில் கூறியபடி ரஜினியின் எச்சரிக்கையை காதில் வாங்காமல், காற்றில் விட்டுவிட்டு பின்பு அவஸ்தை பட்டனர்.

மீடியாவின் வெறியாட்டம்

4. குசேலன் படமும் வெளியாகி, ரஜினி கன்னட வெறியர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டார் என்ற பொய் பிரசாரத்தில் சிக்கி, ரசிகர்களையும் சிறிது தடுமாற வைத்து விட்டது. இதனை சாக்காக வைத்து, தமிழ் மீடியாவுடன் சேர்ந்துகொண்டு விநியோகஸ்தர்கள் குசேலனுக்கு எதிராக கொடி பிடிக்க தொடங்கினர்.

ஞானி சாணியான கதை

5. "எதுடா சாக்கு, ரஜினியை பலி கடா ஆக்கலாம்" என்று காத்திருந்த ஞானிகளுக்கும், சானிகளுக்கும், 'வெறும் வாய்க்கு அவல்' கிடைத்தது போல் ஆயிற்று. ரஜினியையும், குசேலனையும் அதன் வியாபாரத்தையும் போட்டு கண்டபடி தாக்கினர் - உண்மை என்ன என்று தெரியாமலேயே அல்லது தெரிந்துகொள்ள விரும்பாமலேயே.

குசேலன் பிரச்னை உலகின் மிகப்பெரிய பிரச்னை

6. மீடியாக்கள் செய்த அட்டகாசத்தால், அப்போது தமிழ்நாட்டில் வேறு பிரச்னைகளே இல்லாதது போன்ற ஒரு தோற்றம் உருவாயிற்று. அமெரிக்காவுக்கும், உலகத்திற்கும், 160 ஆண்டுகள் வியாபாரம் செய்து ஒரே ஆண்டில் ஓட்டாண்டி ஆன "Lehmann Brothers" திவால் ஆனது பெரிய செய்தி ஆக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மீடியாவுக்கோ ரஜினியும், அவர் கேட்காத மன்னிப்பும் மற்றும் குசேலன் படம் அதிக விலைக்கு வியாபாரம் ஆனதும் அதனால் விநியோகஸ்தர்கள் சிலர் நஷ்டம் அடைந்ததும்தான் செய்தி. 'ரஜினி' என்ற மந்திர சொல் பத்திரிகை வியாபாரத்திற்கு பயன்படுவதுபோல், திரைதுரைக்கே பயன்பட்டிருக்காதோ என்று என்ன தோன்றுகிறது.

கல்நெஞ்சம்

7. வெளி உலகத்திற்கு வேண்டுமானால் ரஜினி கூறியதற்கு மாறாக மற்ற அனைவரும் குசேலன் வியாபாரத்தில் செயல்பட்டனர் என்று தெரியாமல் இருக்கலாம். அனால், சம்பந்தப்பட்ட அனைவரும் இதனை அறிந்திருந்தும், அதனால் பயன் அடைந்திருந்தும்கூட, ஒருவரும் "இதில ரஜினிக்கு சம்பந்தம் இல்லை;அப்படியே இருந்திருந்தாலும், அவர் சொன்னபடி நாங்கள் செய்திருந்தால் இந்த நிலைமையே வந்திருக்காது" என்று கூறவே இல்லையே. என்னே கல்நெஞ்சுக்காரர்கள்?

உண்மையான ஞானி இதோ

8. தமிழ் மீடியாக்கள் தன்னை ஏதோ கொலை குற்றம் புரிந்தவன் போல் சித்தரித்திருந்தாலும் கூட, இதனால் நன்மை அடைந்தவர்கள் ஒருவரும் உண்மையை உலகத்திற்கு தெளிவாக்காவிட்டாலும்கூட, ரஜினி என்ற அந்த மாமனிதன் தானே முன்னின்று, தன்னுடைய அறிவுரையை நிராகரித்துவிட்டு வம்பில் மாட்டிக்கொண்ட விநியோகஸ்தர்களை ஒரு தாயை போல அரவணைக்க முற்பட்டு, தனக்கு இதில சம்பந்தம் இல்லாவிடினும்கூட, அவர்களின் நஷ்டத்தில் ஒருபகுதியை தானே ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு கோடிக்கணக்கில் கொட்டிகொடுத்தபின்புதான், ஓநாய்களின் ஓலம் அடங்கியது.

இதைபோன்ற செயல்கள்தான், ஒருவனை மனிதன் என்ற நிலையிலிருந்து 'மாமனிதன்' என்ற அந்தஸ்திற்கு கொண்டு சேர்க்கிறது.

Supremely Self-Confident

ரஜினியை தவிர, வேறு யார் தன்னுடைய படத்தையே அதிக விலை கொடுத்து வாங்காதே என்று முன்கூட்டியே எச்சரிப்பார்கள்? அவனவன், வந்த வரைக்கும் லாபம் என்று சுருட்டிக்கொண்டு ஓடியிருப்பான். அவங்களுக்கு படம் விற்று போனதே பெரிய சாதனை, இதில எங்கே அதிக விலை கொடுத்து வாங்காதே என்றெல்லாம் சொல்வது?

மேலான நிலை

ரஜினியைதவிர வேறு யார் இவ்வாறு தன் பெயர், தான் செய்யாத தவறினால் கெடுக்கப்படும்போதும் பார்த்துக்கொண்டு மெளனமாக இருப்பார்கள்? உடனே, சம்பந்தப்பட்டவர்களை போட்டு காய்ச்சி எடுத்து, தன் பேரை மட்டும் 'ரிப்பேர்' செய்துகொண்டு இருக்க மாட்டார்களா? ரஜினி மட்டுமே, தன் பேரை காவு கொடுத்தாவது தான் மதிப்பவர்கள் பெயர் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய உள்ளம் படைத்தவர். அதனால்தான், அந்த 'மாமனிதன்' தமிழ் மீடியாவின் தரம் குறைந்த விளையாட்டுக்கு ஒரு பதிலும் கொடுக்காமல் மௌனம் காத்து, மற்றவர் மானம் காத்தான்.

கலியுக கர்ணன் இதோ

ரஜினியை தவிர வேறு யார், தன்னுடைய கைகாசை போட்டு, விநியோகஸ்தர்களின் நஷ்டத்தை ஈடு கட்டி இருப்பார்? மற்ற அனைவரும், மீடியாவின் ஆட்டத்தால், 'துண்ட காணோம், துணிய காணோம்' என்று ஓட்டம் அல்லவா எடுத்திருப்பர்?

மனமே பிரதானம்

இப்போது சொல்லுங்கள், திரு. ராம. நாராயணன் கூறியபடி, ரஜினி என்பவர், "மனிதருள் மாணிக்கம்" என்ற பட்டத்திற்கு தகுதியானவர்தான் இல்லையா? மேலும், மேலும் பணமே பிரதானம் என்று வாழ்க்கையை ஓட்டும் மனிதர்கள் நிரம்பிய இக்காலத்தில், 'மனத்திற்கு' மட்டுமே பிரதான இடம் கொடுத்து, 'பணத்தை' துச்சமாக மதிக்கும் மனிதனுக்கே 'மனிதருள் மாணிக்கம்' என்ற பட்டம் மிகவும் பொருத்தம்.

மனித உருவில் மிருகங்கள்

இப்படிப்பட்ட மனிதர்களையும் கூட, மொழி மற்றும் மற்ற பிராந்திய வேறுபாட்டால் பிரித்து பார்க்க துடிக்கும் மனிதர்களையும், கல் நெஞ்சக்காரர்களையும் "மனித உருவில் உலவும் மிருகங்கள்" என்று சொன்னால் தவறில்லைதானே? (உண்மையான) மிருகங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

21 comments:

Prabhu said...

Arun Sir,

You did it again.. Ellathoda muga thiraiyai kizhikkanummnu mudivu panneeteenga. I was desperately looking for a topic like this which would explain the truth behind these issues. Because thalaivar at any point will not do publicity about the good things what he did to the people. He is real karnan. (LIke thalapathy movie) So it is obvious that these type of truths are not known to people and on the other hand this becomes a great advantage for such animals to poison our GOD's name..

R.Gopi said...

//வழக்கம் போலவே தமிழ் கலாச்சாரப்படி யார் தலைமையில் விழா நடக்கிறதோ, அவர்களை ஒரேயடியாக 'ஐஸ்' மழையில் நனைய வைத்து ஒரே தூக்காக தூக்கி விடுவதும் //

சரிதான் அருண்ஜி.... தூக்கினா தூக்கிடுவாங்க... இல்லேன்னா, கால்ல போட்டு மிதிச்சுடுவாங்க....

//பேராசைக்காரர்களின் சூழ்ச்சியால் நாங்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய சூழல்//

இதை சூப்பர் ஸ்டார் அவர்களே ரசிகர்கள் சந்திப்பின் தெளிவுபடுத்தி விட்டார்....

//'பாபா' படத்தின்போது தாங்கள் லாபம் கண்டதாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புதல் வாக்குமூலம் //

அந்த‌ ச‌ம‌ய‌த்தில் ந‌ஷ்ட‌ம் என்று சொன்னால் த‌ன‌க்கும் கிடைக்கும் என்று ப‌ல‌ர், ர‌ஜினியிட‌ம் பொய் சொல்லி, ப‌ண‌ம் வாங்கி சென்ற‌ன‌ர்.. இது தெரிந்தும் ர‌ஜினி பெருந்த‌ன்மையோடு இருந்து விட்டார்... என்ன‌ செய்வ‌து, காய்த்த‌ ம‌ர‌ம் க‌ல்ல‌டி ப‌டுகிற‌து.... ஆனாலும், இவ்வ‌ள‌வு க‌ல்ல‌டி கூடாது.....

//ஞானிகளும், சாணிகளும் ரஜினி என்ற மனிதரை எப்படி எல்லாம் சேற்றை வாரி தூற்றினர்?//

இது ந‌ம்ம‌ நாட்டுல‌ ச‌க‌ஜ‌ம்தானே ஜி.... ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த‌வ‌ன், தேர்த‌ல் வாக்குறுதி ஒன்றை கூட நிறைவேற்றாம‌ல் அவ‌னின் ஊரிலேயெ சுற்றி வ‌ருவான்... அவ‌னை எல்லாம் ஒரு கேள்வி கூட‌ கேட்டுவிட‌ மாட்டான்... ஏனென்றால், உல‌கில் உள்ள‌ அனைத்து வாக‌ன‌ங்க‌ளிலும் ஆட்க‌ள் வ‌ருவார்க‌ள், அடிப்ப‌த‌ற்கு... இதே, ர‌ஜினியை அடித்தால், அவ‌ர் பேசாம‌ல் போய்விடுவார், அதுதான் கார‌ண‌ம்....

//தேவையே இல்லாமல் 'சர்வே' எல்லாம் நடத்தி //

இதுல‌ "குருவி"க்கு முத‌ல் இட‌மாமே... உண்மை என்ன‌ன்னா, "குருவி" ந‌ல்லா ப‌றந்த‌து உண்மைதான்....போட்டியில் இல்லை...தியேட்ட‌ரை விட்டு, வேக‌மாக‌.... ஆஹா...என்னே ஒரு சாத‌னை....அதையும் வெட்க‌மின்றி சொல்லி திரியும் இந்த‌ கேடுகெட்ட‌ ப‌த்திரிக்கைக‌ளும், ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளும்....

//பல கோடி ரூபாய்களுக்கு மொத்தமாக "பிரமிட் சாய்மீரா" என்ற குழுமத்திற்கு விற்று விட்டனர்.//

இதாவ‌து, பைச‌ல் ப‌ண்ணப்ப‌ட்டு, ஒரு வ‌ழியாக‌ முடிந்த‌து. ஆனால், "க‌ர்ம‌யோகி" ப‌ட‌த்திற்கு அட்வான்ஸாக கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ரூ.8/10 கோடிக‌ளை "அண்ண‌ன் அருமைநாய‌க‌ம்" ஆட்டையை போட்டாரே..... அதை ஏன் திருப்பி கொடுக்க‌வில்லை? அந்த‌ ப‌ண‌த்தை திருப்பி கொடுத்தால், சாமிநாத‌ன் பிழைப்பாரே....

//தமிழ் மீடியாவுடன் சேர்ந்துகொண்டு விநியோகஸ்தர்கள் குசேலனுக்கு எதிராக கொடி பிடிக்க தொடங்கினர்.//


எரிய‌ற‌ கொள்ளியில் எந்த‌ கொள்ளி ந‌ல்ல‌ கொள்ளி??

//உண்மை என்ன என்று தெரியாமலேயே அல்லது தெரிந்துகொள்ள விரும்பாமலேயே.//

அவ‌ர்க‌ளுக்கு உண்மை தெரியும் ஜி.... இது எல்லாம் தெரியாமலேவா ப‌த்திரிக்கையில் குப்பை கொட்ட‌ போகிறார்க‌ள்.... இருந்தாலும் திட்ட‌ற‌துக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும் போது, திட்டுவோமே என்றுதான்...

//"இதில ரஜினிக்கு சம்பந்தம் இல்லை;அப்படியே இருந்திருந்தாலும், அவர் சொன்னபடி நாங்கள் செய்திருந்தால் இந்த நிலைமையே வந்திருக்காது" என்று கூறவே இல்லையே.//

முந்தைய‌ ப‌தில்தான் இதுக்கும்.... அயோக்கிய‌ர்க‌ள் கூட்ட‌ம் கூடி விட்ட‌து.... அவ‌ர்க‌ளின் ப‌ர‌ம்ப‌ரை புத்தியான‌ பொறாமைதான் இத‌ற்கு கார‌ண‌ம்...

//ரஜினியைதவிர வேறு யார் இவ்வாறு தன் பெயர், தான் செய்யாத தவறினால் கெடுக்கப்படும்போதும் பார்த்துக்கொண்டு மெளனமாக இருப்பார்கள்?//

யாரும் இருக்க மாட்டாங்க ஜி.... "பேக்கரி"ய ஒரு தடவை விஜய் டி.வி.யில் போட்டு கிழித்த போது, எஸ்.ஏ.சி. நேரடியாக ஒரு "குண்டர்" படையை அங்கு அனுப்பி செய்த அலம்பல் என் நினைவுக்கு வருகிறது.... அடுத்த வாரம் அந்த சேனலில் "குருவி"யிடம் மன்னிப்பு கூட கேட்டார்கள்.

//ரஜினி மட்டுமே, தன் பேரை காவு கொடுத்தாவது தான் மதிப்பவர்கள் பெயர் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய உள்ளம் படைத்தவர்.//

உண்மைதான்.... தன்னால் அடுத்தவர்கள் எந்த துன்பமும் அனுபவிக்கக்கூடாது என்ற உயர்ந்த சிந்தனை கொண்டவர் ரஜினி.... இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...

இவ்வளவு உயர்ந்த உள்ளமும், நல்ல சிந்தனையும் உள்ள ஒரு "மனிதன்" நாட்டுக்கு சேவை செய்ய வரமுடியாத படி அரசியல் தரம் தாழ்ந்து உள்ளதே என்று லட்சோபலட்சம் பேர் வேதனைப்படுகிறார்கள்..

//(உண்மையான) மிருகங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.//

நெத்தி அடியா முடிச்சு இருக்கீங்க‌ ஜி....

நல்லா இருக்கு....வாழ்த்துக்கள்....

M Arunachalam said...

Prabhu/Gopi - Thanks for both your comments.

. said...

ரொம்ப நல்லா இருக்கு. தங்கள் தமிழும் அதில் சொல்லிய கருத்துக்களும் பிரமாதம்.

தங்கள் எழுத்தில் கோபம், நையாண்டி, கவிதை எல்லாம் ஒரு சேர வருவது அற்புதம்.

ஞானிகளும் சாணிகளும் என்ற வார்த்தை பதத்தில் ஒரு சேர அசத்தியிருக்கீறீர்கள்.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

kppradeep said...

Dear Arun sir,
Congrats for an yet another good post. All these perverted animals who thrashed Rajini sir will have to pay for their sins. All of them had kept quiet becos they were like scorpion stung theives who could not open their mouth when caught with their pants down.
Above all Gnani and Saani turned experts in film marketing over night and started giving advise to of all persons rajini.
You reap what you sow and all these bad karmas will haunt these animals.
In Rajini 25 function i want to recall a statement by rajini-
"I do not consider this as an achievement and there are people bigger than me but one thing i am proud of is-No one can tell that iam in aproblem becos of Rajini/ i have lost becos of Rajini"
ஆண்டவன் தலைவர் பக்கம் இருக்கும் பொது நாம் எதற்கும் கவலை பட தேவை இல்லை
R.Gopi- I did enjoy your comments too

Simple_Sundar said...

நெத்தியடி பதிவு. பாராட்ட வார்த்தைகள் இல்லை.

குசேலன் பிரச்னையில் தலைவர் பலிகடா ஆக்கப்பட்டதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

என்ன செய்வது, நல்லவர்களுக்கு தானே சோதனைகள் வரும்.

- சுந்தர்
Onlysuperstar.com

பாசகி said...

அதிரடி-ஜி.

என் அறிவுக்கு எட்டுனவரைக்கும், தலைவர் சினிமாவுக்கு வந்து பெற்ற ஆகப்பெரிய நல்ல விசயம் ரசிகர்கள், (கேடு)கெட்ட விசயம் மீடியாவும் கூடவே இருந்து குழிபறிக்கற பச்சோந்திகளும்.

Kalyan said...

Nethi adi

சமுத்ரன் said...

Arun, kalakkal post. This is the first time I visit your blog (with the help of onlysuperstar.com) and read all your posts related to Rajini. This one is excellent! Keep up your good work!

Unknown said...

wht to say no words...only tears.

Bhuvanesh said...

கலக்கல் பதிவு தல!! இன்னும் எதனை முறை இந்த மாதிரி வாஞ்சனை/பேராசை மனிதர்கள் தலைவர் கிட்ட தோல்வி அடைவார்கள் னு தான் நெனைக்க தோணுது!

ஈ ரா said...

விநியோகஸ்தர் சங்க தலைவரே கூறியிருக்கிறார்... உண்மையில் மனசாட்சி உள்ளவர்களாக இருந்திருந்தால் எல்லா ஊடகங்களும் வருத்தம் தெரிவிக்க வேண்டும்... அடச்சே அஆனாலும் எனக்கு நெம்ப ஆசைதான்...

ஈ ரா

ANANTH MURALI said...

அன்புள்ள அருணாசலம்,
எனக்கு ஒரு சந்தேகம்- ரஜினி ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்தபின்தான் ரூ இருபது கோடி வாங்கி போட்டுகொண்டாரா?
விநியோகஸ்தர்கள் அதிக அமௌன்ட் கொடுத்ததற்கு அதுதானே காரணம்!
Ramanarayanan is a politician. It is very natural for politicians to play to the gallery with untrue statements. Cinema and politics are pure business. Even assuming that all everybody said after 2 or 3 years about Kuselan, Rajini and Baba are true it is all part of a business cycle. Rajini needs the distributors as much as the distributors need him. It is all part of the game. Even conceding your statement that Rajini has been more than fair or generous towards his own film fraternity how can you call him Manitharkula Manikkam? Such titles are purely reserved for people who render social service in a selfless and non-commercial manner.

How undeserving Rajni is for such titles will be clear if one goes through the speech given by RK in the very same EEram function. I listened to his speech on some FM while driving. Mr.RK was showering praise on MR Radha as a person. MR Radha is a great actor but was a person who almost shot dead the one and only MGR due to personal enemity. MGR survived but had to live with the speech handicap for the rest of his life. Now tell me, MR Radha a killer for personal gains as early as 1967 is referred to by Mr.RK as " Naan migavum madhikkindra manithargalil oruvar". And MGR is reverred by the entire Tamilnadu as Puratchitalaivar. He is also the Late CM of the State. Does not this Manitharul Manikkam know the history or does he think he can say anything and get away!!

M Arunachalam said...

//எனக்கு ஒரு சந்தேகம்- ரஜினி ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்தபின்தான் ரூ இருபது கோடி வாங்கி போட்டுகொண்டாரா?
விநியோகஸ்தர்கள் அதிக அமௌன்ட் கொடுத்ததற்கு அதுதானே காரணம்!//

I sincerely don't understand what are you trying to say or imply.

If you are trying to imply that Rajini has got Rs. 20 crore out of the sale proceeds of Kuselan, I would like to repudiate that. As per my sources, Rajini has got no remuneration for acting in Kuselan. On the contrary, Rajini lost a couple of crores, when he volunteered to compensate some distis/exhibitors. I believe Rajini wanted to help his mentor who was in financial dire straits for the "nth" time - again the help was volunteered by Rajini himself when he came to know about it.

For your info., I myself clearly at the beginning of my post that most people who speak in such functions keep "ICE" on the chief guest.

But, I have gone ahead & fully justified why the title "Manidarul Maanickam" suits Rajini to the T. Even though Kuselan project is not a social service, based on the facts I mentioned above, Rajini
(i) NEED NOT HAVE ACTED IN Kuselan BUT HE DID THAT VOLUNTARILY TO HELP HIS MENTOR WHO WAS IN FINANCIAL DISTRESS;
(ii)NEED NOT HAVE MADE ANY STATEMENT ABT HIS HOGENAKKAL SPEECH BUT DID AS PER THE REQUEST OF THE PRODUCERS, WHICH WAS DELIBERATELY MIS-INTERPRETED BY THE PAROCHIAL TAMIL MEDIA;
(iii) NEED NOT HAVE VOLUNTEERED TO COMPENSATE THE DISTIS/EXHIBITORS BUT DID IT OUT OF HIS OWN PERSONAL MONEY;
(iv) COULD HAVE WRIGGLED OUT OF THE PROBLEMS BY SIMPLY BLAMING THE PRODUCERS FOR BEING GREEDY BUT NEVER DID THAT TILL DATE.

Can you point out one single person who possess all these qualities today whether in film world or otherwise? As far as his social services are concerned, he rarely advertises it for you & me to discuss it in public. That is another quality which makes him a well-deserving candidate for the title.

//Even conceding your statement that Rajini has been more than fair or generous towards his own film fraternity//

Oh! Good. At last you are conceding that Rajini helps his own film fraternity. Some time back, you were accusing him of not investing his funds in film world but only in real estate - completely forgetting that till Baba, Rajini has produced several movies too. Now you say he is helping distis, etc. but at the same breadth you say that "it is part of the game". If that is part of the game, then why should you praise your KH that he is investing his money back in filmdom, as if he is doing a great service to his fraternity?

As far as your argument that "Rajini is undeserving for the title due to his praising MRR, who shot MGR", I can only say that MRR has been sentenced by a court of law in India for that offence & he has completed the same & has also been released. So, why should that incident cloud Rajini's or anybody's mind when they talk about MRR since MRR has had other good & no-nonsense qualities too, which is what Rajini was quoting & praising in that function.

Can I ask you why are you supporting a person like KH, who is anything but a role-model because of his public display of animal instincts? Based on your flimsy MRR-MGR argument, why can't the same yardstick be applied to you also? As I know you personally, why are you defending KH in spite of his personal acts not gelling with your beliefs & practices? Because you perceive KH as a good actor you are following him, right? So, why don't you give such freedom to Rajini too who may be appreciating MRR's abilities, other than shooting?

Giridharan V said...

//Can I ask you why are you supporting a person like KH, who is anything but a role-model because of his public display of animal instincts? Based on your flimsy MRR-MGR argument, why can't the same yardstick be applied to you also? As I know you personally, why are you defending KH in spite of his personal acts not gelling with your beliefs & practices? Because you perceive KH as a good actor you are following him, right? So, why don't you give such freedom to Rajini too who may be appreciating MRR's abilities, other than shooting?//

Arun,

Unga neram enaku pidichuruku...

You are good in arguements.

Regards,
Giri

Unknown said...

//"மனிதருள் மாணிக்கமும், மனித உருவில் மிருகங்களும்"//

யாரைப்பத்தி இந்த பதிவு. அண்ணல் காந்தியைப்பற்றியா

M Arunachalam said...

//யாரைப்பத்தி இந்த பதிவு. அண்ணல் காந்தியைப்பற்றியா//

ஒ! தமிழ் படிக்க தெரியாத கேசா?

21 ஆம் நூற்றாண்டில் நம்மிடையே நடமாடும் "வாழும் மகாத்மா" வை பற்றியது இந்த பதிவு.

Unknown said...

//21 ஆம் நூற்றாண்டில் நம்மிடையே நடமாடும் "வாழும் மகாத்மா" வை பற்றியது இந்த பதிவு.//
அடேங்கப்பா. சூப்பர் தலைவா

Unknown said...

அருண், அடிச்சா நெத்தியடியாகத்தான் அடிக்கறீங்க! :)
சூப்பர் சார் :)

(Mis)Chief Editor said...

ஆணித்தரமான கருத்துக்களை முன் வைத்ததற்கு நன்றி!

எச்சரித்த ரஜினி எட்டி நில்லாமல், முன் நின்று பட விநியோகம் செய்திருந்தால் பிரச்னையே வந்திருக்காதே ?!

ரஜினி ரசிகனான என்னை யோசிக்க வைக்கும் கேள்வி!

கிரி said...

அருண் நல்லா நச்சுனு கூறி இருக்கீங்க..

குசேலன் பற்றி ஏற்கனவே நான் என் பதிவில் (FDFS) கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம்

//(Mis)Chief Editor said...
எச்சரித்த ரஜினி எட்டி நில்லாமல், முன் நின்று பட விநியோகம் செய்திருந்தால் பிரச்னையே வந்திருக்காதே ?!//

நீங்க பேசுவது ரொம்ப அநியாயம்

படம் ரஜினி தயாரிப்பு அல்ல..தன் படம் இல்லை என்றாலும் மற்ற நடிகர்களை போல இல்லாமல் பிரச்சனை வந்தவுடன் ஒதுங்கி போகாமல் உடன் இருந்தது எவ்வளோ பெரிய விஷயம்..

ரஜினி படத்தை விற்கும் போதே அதிக விலைக்கு விற்காதீர்கள்..விநியோகஸ்தர்களை அதிக விலைக்கு வாங்காதீர்கள், அதிக திரை அரங்குகளில் வெளியிடாதீர்கள்..என் பங்கு மிக குறைவு என்று அனைத்தும் கூறியும் இதை யாரும் காதில் வாங்கி கொள்ளாமல் அனைத்தையும் செய்து விட்டு மாட்டி கொண்டார்கள்.

ரஜினி தயாரிப்பாளராக இல்லாத போது விநியோக உரிமையில் எப்படி தலையிட முடியும்.. இந்த படம் தன் குருநாதருக்காக செய்து கொடுத்தது இதில் எப்படி அனைத்திலும் ரஜினியே செய்து தந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை.

ரஜினி ரசிகரான நீங்களே இப்படி புரிந்து கொள்ளாமல் பேசினால் மற்றவர்களை என்ன கூறுவது.

அன்புடன்
கிரி