Saturday, December 12, 2009

ரஜினி 60



றுபதாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பவரே!
தர்ச நாயகனாய் அனைவர்க்கும் ஆனவரே!!

ளசுகளின் மனசிலே ஈசியாய் இடம் பிடிப்பவரே!
ஓட்டும் திரை அரங்கம் இல்லாமல் செய்பவரே!!

லகவாழ் ரசிகர்களின் உண்மையான நாயகரே!
ருக்கு உபதேசிக்காமல் உண்மையாய் வாழ்பவரே!!

ல்லோரையும் எந்நாளும் மகிழ்ச்சியுற வைப்பவரே!
ணிபோல் முன்வந்து எளியோரை மேலேற்றுபவரே!!

ந்துகோடி வாக்குகளை அள்ளப் பிறந்தவரே!
ருநாளும் உனைமறவாத ரசிகர்களை பெற்றவரே!!
ய்வுக்கே ஒய்வு கொடுத்து ஓடியாடி உழைப்பவரே!!!

ள்ளமில்லா உள்ளத்துடன் குழந்தைபோல் சிரிப்பவரே!
லனமிலா உறுதியுடன் பல தடைகள் கடந்தவரே!!

ஞானமெனும் ஜோதியினை நாள்தோறும் தேடுபவரே!
தான் என்னும் தலைகனத்தை தள்ளியே வைத்திருப்பவரே!!

நாட்டிலுள்ள நல்லோரின் நம்பிக்கை நட்சத்திரமே!
பாராளும் வாய்ப்புதனை பதறாமல் மறுத்தவரே!!

ருத்துவரின் மனத்திமிரை மறுதலித்து மன்னித்தவரே!
யாகாவாராயினும் நா காக்கும் பண்புள்ளவரே!!

ராஜரிஷியாக தகுதியுள்ள இந்தியரே!
ரவேண்டும் நீர் எமை ஆள இப்போதாவது!!

சஷ்டியப்தபூர்த்தி காணும் சந்தோஷ தருணத்தில்,
கஷ்ட வாழ்க்கை வாழும் பலகோடி மக்களுக்கு,
இஷ்ட தெய்வமாக திகழும் இருபத்தி ஓராம் நூற்றாண்டு காந்தியே!

நடிப்பே உமக்கு நாட்டமா? நன்று நன்று;
இமய மலையே உன் மன ஓட்டமா? அதுவும் நன்று;
பொது சேவையே உன் தேவையா? ஆஹா மிகவும் நன்று.

எந்திரன் படம் முடித்து, எது உம் முடிவென்று
எல்லோரையும் கூட்டி, எடுத்துரைக்க வேண்டுகிறோம்;

எது உன் விருப்பமோ, அதுவே எம் விருப்பமும்;
அது எதுவாக இருப்பினும், பொது நன்மையே அதில் பிரதிபலிக்கும்;

தீர்க்கமாக யோசித்து, திண்ணமாக தெரிவிப்பாய்;
சன்மார்க்கமாக நாங்கள், சத்தியமாய் ஒத்துழைப்போம்.

அலர்ஜி கவிஞன் அருணாசலம்

18 comments:

Unknown said...

arumai kavingan arunachalam top

ஈ ரா said...

நல்ல கவிதை அருண் ஜி

வாழ்த்துக்கள்.....

sivarajthoughts said...

superrrr arun sir

Vijay said...

நீங்கள் உங்கள் படைப்புகளை ரஜினிக்கு அனுப்ப வேண்டும். நெகிழ்ந்து போவார் :)

ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

crt srikanth said...

Style - Rajni
Innovation - Anna

All the best

Gowri Shankar said...

Arun,

It's just awesome! I loved the last few lines. You reflect the true feelings of a hardcore fan. Hats off!

Long live thalaivar!

kppradeep said...

Dear Arun sir,
Excellent, awesome just like super star.
தீர்க்கமாக யோசித்து, திண்ணமாக தெரிவிப்பாய்;
சன்மார்க்கமாக நாங்கள், சத்தியமாய் ஒத்துழைப்போம்.
I too agree.
keep posting often.
Pradeep

Unknown said...

கவிஞ்ஜருக்கு வாழ்த்துக்கள் . உமது கவிதை திறன் உயர்ந்து கொண்டு வருகிறது .

ANANTH MURALI said...

என் அருமை நண்பன் அருணாசலமே,

நன்று. உனது ரஜனிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து மூலம் ஒரு நல்ல கவிஞனாய் நீ உருவாகி வருவது புரிகிறது. பொய்யும் , மிகைபடுத்துதலும் கவிஞர்களின் உரிமை. அதை செவ்வனே செய்திருக்கிறாய்.

ஆனாலும் யானைக்கும் அடி சறுக்கும். மிகை கூடியதால் மணி விழாவிற்கும் ஷஷ்டியாப்தபூர்த்திக்கும் வித்தியாசம் தெரியாமல் முடித்துவிட்டாய்.

உன் ரஜினி போல், உன் கனவுகள், அபிலஷைகளிலும் ஒரு தெளிவு ( focus or clarity ) இல்லை.

இருப்பினும் உன்னைப்போல் எனக்கு யார் மீதும் த்வேஷம் இல்லை. நக்கலும் கிடையாது. ஓரளவு ரஜினியும் நல்ல நடிகன், entertainer என்ற காரணத்தினால் உன்னுடன் சேர்ந்து நானும் ரஜினியை அவரது அறுவதாம் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்

ppage said...

அருண்ஜி,

நல்ல கவிதை.
ஓசை நயம் எந்த இடத்திலும் பிறழவில்லை. எதுகை மோனையும் பொறுந்தி, உள்ளூட ஒரு நகைச்சுவை. பிரமாதம்.


வார்த்தையில் மட்டும் அல்லாது அர்த்ததிலும் - அம்சம்,
ஆழம்,
இதம்,
ஈர்ப்பு,
உண்மை,
ஊக்கம்,
எளிமை,
ஏக்கம்,
ஐ! நல்லா இருக்கே, ஒப்புயர்வில்லாதது,
ஓங்கு,
அஃவையார் ஆத்திசுடிய டிரை பண்ணேன்.... ஆத்தி....

எல்லாம் சரிதான். ஏன் அலர்ஜி கவிஞர் எனும் பட்டப் பெயர்.

இது படிச்சு வாங்கினதா, இல்ல படிச்சுட்டு யாரும் கொடுத்ததா.....

லாரன்ஸ்.

(கோபி லீவுல போனது கை ஒடிஞ்ச மாதிரி இருக்குது. இல்லன்னா கவிதை வந்த தகவலும் சொல்லி பின்னூட்டத்துக்கு ஐடியாவும் கொடுத்துருவாரு)

Vasumathy said...

chinna vayasula A, AA, I, EE sollikudutta vadiyaar peyarai kaappathitta......

suki said...

மருத்துவரின் மனத்திமிரை மறுதலித்து மன்னித்தவரே
:)))))

arun ji simple and beautiful words..

Raja said...

அருன் கலக்குறீங்க. ஒவ்வொரு வரியும் அர்த்தம் உள்ள அருமையான கவிதை.

கிரி said...

அருண் என்ன இப்படி திடீர்னு ஒரு புது கெட்டப்... இதுவும் நல்லாத்தான் இருக்கு ;-)

M Arunachalam said...

கமெண்ட் செய்து பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

லாரன்ஸ் மற்றும் கிரி - உண்மையாகவே எனக்கு கவிதை என்றாலே அலர்ஜி. ஆனால், தலைவர் என்று வரும்போது கூடவே "exception" வந்துவிடுவதால், சிறிது ரசிப்பேன். நண்பர் ஈ.ரா.வின் 'தலைவா, தலைவா' கவிதை தான் எனக்கு தூண்டுகோல் (inspiration). அதன் வெளிப்பாடுதான், எனது இந்த விஷ பரீட்க்ஷை (?). அனைவரும் சொல்வதை பார்த்தால், நான் இதில் தேறிவிட்டாற்போல் தோன்றுகிறது. நன்றி.

Prabhu said...

அருண் ஜி,

நீங்க ஒரு PANT SHIRT போட்ட வைரமுத்து. அருமையான கவிதை. கலாக்கீட்டீங்க போங்க.

கவிதையிலும் PUNCH வைப்பது தான் அருண் SPECIAL.

Please don't stop trying such things.KEEP IT GOING JI. ALL THE BEST.

Unknown said...

Arunji,

Late to comment but better late than never.. too crispy and informative ... as days go buy y(o)our love towards thalaivar is increasing... let us hope for the best.. Inthu Kodia Vakkai Allappiranthavare ... simply terrific

keep it up

Kamesh

R.Gopi said...

Arun ji....

Why to add ALLERGY.... This is really a nicely written Kavidhai...

Keep it up.....

visit here to see what i have written for thalaivar...

சூரியனோ....சந்திரனோ...யாரிவனோ சட்டென சொல்லு..... http://jokkiri.blogspot.com/2009/12/blog-post.html