Friday, July 31, 2009

எப்பிடி இருந்த நீ இப்பிடி ஆயிட்டியே !!! (Updated)


ஒரு காலத்திலே ரஜினிக்கு போட்டியாக உன் படங்கள் வெளியாகிகொண்டு இருந்தன. சில சமயம் உன் படங்கள் வசூலில் ரஜினி படங்களை மிஞ்சவும் செய்தன.

ஆனால், தொன்னூறுகளில் இருந்து உன் படங்களால் ரஜினி படங்களின் ஆதிக்கத்தை தாக்கு பிடிக்க முடியவில்லை. இருப்பினும், அவ்வப்போது, "தேவர் மகன்" போன்று சில படங்கள் வசூலில் குறை வைக்காமல் பரிமளித்தன. "ஆளவந்தான்", "ஹே ராம்" போன்று ஒரு சில படங்களால் உன்னால் மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்க முடிந்தது - படம் வெளியாவதற்கு முன்னால். வெளியானபின்பு, அப்படங்கள் பப்படங்கள் ஆனது ஒரு தனிக்கதை.

"உலக நாயகன்" என்று உன்னை உன் ரசிகர்கள் (?) அழைத்தாலும், உண்மையில் உன் பெயரும், புகழும் எந்த அளவிற்கு உலகம் முழுக்க பரவி இருக்கிறது என்பதற்கு, நீ "பஞ்ச தந்திரம்" படத்திற்காக கனடா மற்றும் அமெரிக்க நாட்டிற்கு போனபொழுது உன் பெயரை பார்த்துவிட்டு அவர்கள் உன்னை விமான நிலையத்தில் வைத்து அலைக்கழித்ததே நல்ல சாட்சி. ஒவ்வொருவருக்கும் நீயே உன்னைப்பற்றி எடுத்து கூறியும், உன் பயோடேட்டாவை காட்டியும்கூட அங்குள்ள வெளிநாட்டவர் ஒருவருக்கும் உன்னை பற்றிதெரியாமல், கடைசியில் இந்திய வெளியுறவு அலுவலக அதிகாரிகள் நேரில் வந்து உன்னை மீட்டெடுக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட "உலகம் அறியா நாயகன்" நீ என்ற உண்மையை உலகம் அன்று உணர்ந்தது.

தமிழ் பட துறையில், மற்ற பட துறைகளை போலவே, மார்க்கெட் நிலவரம்தான் ஒரு நடிகரின் சம்பளத்தை நிர்ணயிக்கும் என்ற அடிப்படையில், உன்னுடைய மிக பெரிய வெற்றிப்படம் என்று சொல்லிக்கொள்ளும் "தசாவதாரம்" படம் வெளிவந்த பின்பும் கூட நீ சம்பள அடிபடையில் ரஜினி (Always Numero uno) மற்றும் அஜித் (Distant Second) இருவருக்கும் பிறகு தொலைவில் மூன்றாவதாகத்தான் (Very Distant Third) வர முடிந்திருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறதே, உன்னுடைய மார்கெட்டின் உண்மையான லட்சணம். சந்தை என்பது கருணை இல்லாதது. Market is merciless, isn't it?

இப்படியாகத்தானே, ஒரு காலத்தில் முதல் இடத்திற்கு ரஜினியுடன் போட்டியிட்ட நீ, படிப்படியாக கீழிறங்கி இப்போது விக்ரம் போன்ற நடிகர்களின் படங்களுடன் போட்டியிடுவதற்கே யோசிக்கும் நிலைக்கு தள்ளபட்டுவிட்டாயே என்பதை நினைத்தால் மிகவும் பாவமாக இருக்கிறது. இந்த செய்தி "ஹிந்து" பத்திரிகையில் இப்போது வெளி வந்திருக்கிறது. உன்னுடைய "உன்னை போல் ஒருவன்" திரைப்படம், விக்ரமின் "கந்தசாமி" திரைப்படத்துடன் மோதுவதற்கு பயந்துகொண்டு, செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

உன்னுடைய ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முதலில் உன்னுடைய ஐம்பதாண்டு கால திரை துறை வாழ்வினை குறிக்கும் விதமாக ஆகஸ்ட் பன்னிரண்டாம் தேதி வெளியிடுவதாக இருந்த உன்னுடைய "உன்னை போல் ஒருவன்" திரைப்படம், இப்போது உன்னிலும் மார்க்கெட் நிலவரத்தில் கீழாக இருக்கும் விக்ரம் போன்ற நடிகர்களின் திரைபடத்துடன்கூட மோதுவதற்கு ஏன் பயப்பட வேண்டும்? இது உணர்த்துவது என்னவென்றால் உனக்கே உன்னுடைய படத்தின்மேல் நம்பிக்கை இல்லை என்பதுதான். மேலும், "கந்தசாமி" படத்தின் தயாரிப்பாளரான "கலைப்புலி" தாணு, உன்னால் மிகவும் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட "ஆளவந்தான்" தயாரிப்பாளர் என்பதனால், உன்னுடைய படத்தை விசேஷமாக தோற்கடிக்க ஏதாவது செய்து உன்னை சரியாக பழிதீர்த்துக்கொண்டு விடுவாரோ என்றும் பயமோ?

எது எப்படி இருப்பினும், இந்த செய்தியை படித்தவுடன் எனக்கு தோன்றிய நினைப்புதான் "எப்பிடி இருந்த நீ இப்பிடி ஆயிட்டியே!".

கமல் ரசிகர்களை மேலும் வெறுப்பேற்றும் செய்தி:

இந்த வார்த்தையை சுட்டினால் 'கந்தசாமி' படமும், அதன் நாயகன் 'விக்ரமும்', மற்றும் அதன் தயாரிப்பாளர் 'கலைப்புலி' தாணுவும், கமலையும், அவர் ரசிகர்களையும் படுத்தும் பாடு உங்களுக்கு விளங்கும். கந்தசாமியின் ஆகஸ்ட் மாத வெளியீட்டால், கமலின் . போ. . வுக்கு (அதாங்க, உன்னை போல் ஒருவன் படம்) அடுத்த இரண்டு மாதங்களுக்கு தியேட்டர் கிடைக்காது போலிருக்கிறது. கந்தசாமி படம் மட்டும் வெற்றி அடைந்துவிட்டால், . போ. . தீபாவளிக்கு முன்பு ரிலீஸ் செய்யப்படுவது ரொம்ப கஷ்டம். பார்ப்போம். 'தசாவதாரம்' வெற்றிப்படம் என்று சொல்லப்பட்ட அதன் நாயகனின் அடுத்த படமே தியேட்டர் கிடைக்காமல் திண்டாடுவது என்பது அந்த 'நாயகனின்' மார்க்கெட் நிலவரத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

பின்குறிப்பு: இந்த பதிவை படிப்பவர்கள், கண்டிப்பாக பின்னூட்டங்களையும் (comments) படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

25 comments:

R.Gopi said...

//படம் வெளியாவதற்கு முன்னால். வெளியானபின்பு, அப்படங்கள் பப்படங்கள் ஆனது ஒரு தனிக்கதை.//

ஆ...ஹா.... ஆரம்பமே அசத்தலா இருக்கே அருண்ஜி..... இனி போக போக "உலக நாயகன்" என்ன கதி ஆக போறாரோ.....

//இந்திய வெளியுறவு அலுவலக அதிகாரிகள் நேரில் வந்து உன்னை மீட்டெடுக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட "உலகம் அறியா நாயகன்" நீ என்ற உண்மையை உலகம் அன்று உணர்ந்தது.//

நான் சொல்லி முடிக்கறதுக்கு முன்னாடி, அருண்ஜியின் ஆப்பு "உலக நாயகனை" பதம் பார்க்க ஆரம்பித்து விட்டதே!!! நடத்துங்க "தல".

//"உன்னை போல் ஒருவன்" திரைப்படம், விக்ரமின் "கந்தசாமி" திரைப்படத்துடன் மோதுவதற்கு பயந்துகொண்டு, செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது.//

அட்ரா அட்ரா அட்ரா சக்கை....... விஷயம் இப்படி போகுதா?? ரஜினியின் சிவாஜி ரிலீசின் போது, மற்ற படங்களை பெட்டியில் வைத்து பத்திரமாக பூட்டிய செய்தி நினைவுக்கு வருகிறது... அதையும் மீறி வெளிவந்த "அமிதாப் பச்சனின்" ஜூம் பராபர் ஜூம் வந்த வேகத்தில் பெட்டியில் அடங்கிய கதையையும் பார்த்தோம்.... ஒகே ... நெக்ஸ்ட்....

//உன்னுடைய படத்தை விசேஷமாக தோற்கடிக்க ஏதாவது செய்து உன்னை சரியாக பழிதீர்த்துக்கொண்டு விடுவாரோ என்றும் பயமோ?//

எனக்கென்னவோ, இதெல்லாம் அடுத்தவங்க பண்ண வேண்டியது இல்லை.... தானே பண்ணி கொண்டு விடுவார் என்றே தோன்றுகிறது.....

கிடைக்கிற கேப்ல எல்லாம் இப்படி "உலக நாயகனுக்கு" ஆப்பு வெக்கறீங்களே!!

//"எப்பிடி இருந்த நீ இப்பிடி ஆயிட்டியே!".//

இதுதான் அருண்ஜி, காலத்தின் கோலம்.....

சூப்பராக எழுதி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்.....

கிரி said...

அருண் ஏன் இந்த கோவம்? :-)

M Arunachalam said...

Gopi,

Thanks for your prompt comments.

Giri,

I wrote matter of factly. Plus whenever I get an opportunity to ridicule Kamal, I generally don't want to miss it.

என் கடன் (கமலை) கிண்டல் செய்து கிடப்பதே.

RK said...

Arunji,

Good morning, since there is no tough competition sorry no competion, henceforth we should stop comparing with Kamal.

RK.

Vijay said...

Sir,
There is always a world of difference between class and mass.

Rajini is a mass hero. Kamal is a class hero.

Samsung and Sony both make TVs. Samsung sells more TVs than Sony, but can't match Sony's performance any day.

Your comparison is like that.

Sorry, if I sound harsh !!!

M Arunachalam said...

Vijay - Welcome Sir.

My post is simply to highlight the news which has come in "The Hindu" (earlier in some other website too) that "Unnai Pol Oruvan" has been postponed to a Sep. release date from the original Aug.12 release date since Vikram's "Kandasamy" is slated for release on 15th Aug., 2009.

Kamal has been in the industry for 50 years; supposed to be a "class" actor, according to some people like you; but also acted in lousy mass movies like "Dasavataram" donning 10 different make-ups (not roles); has had running duel (professionally) with Rajini for the No.1 slot in Tamil movies in the 80s.

With so much experience and "class" behind him in an industry, where, once upon a time, he competed for the coveted No. 1 position, WHAT IS IT TODAY THAT MAKES HIM TO FEAR EVEN A "NOT-SO-MASS BUT CLASS" ACTOR (not even a Star) LIKE VIKRAM & HIS MOVIE?

Kamal even while launching it, declared that "Unnai Pol Oruvan" would have been finished & ready for release even in July itself but due to his fans' wish of celebrating his 50 years film life, which falls on Aug.12, it will be released on that date. But, unfortunately for him, how can he know or predict, at that time that Kandasamy will also be delayed & slated for a release around the same time, right?

What is the definition of "Class"? Who told you that Class & Mass can't go together. Rajini today is a living example of "Class & Mass" going well together. It is proved by millions of his fans cutting across demography, race, nationality, religion or sex.

What is "class' to you, may be "over acting" to me. What is "class' to you may be "totally confusing" to me.

I remember director BharatiRaja's comments when his "Kaadhal Oviyam" failed miserably at the BO. Instead of taking the result in his stride, he commented that his movie came 10 years earlier. Now that 20 years is over since that movie released originally, I request you to go & watch it today. I bet that even today you will feel the same like the viewers of 80s felt. But, according to BR, it is his Best & Class movie.

So, if, according to this definition, Class means what is liked by a select few, then it is better to be screened only in film festivals & not be screened for the PAYING PUBLIC.

Kamal, over & above his urge to show-case his "talents" (whatever that may be), should also, at least once in a while, take into consideration, the viewers' interests & likes & dislikes. Then, only then, his so-called 'class' will be recognised. Till then, his 'class' has to be confined to a 'class room' only.

BTB, I have no qualms in your comparing Kamal with Sony but Rajini is more like Apple than Samsung. There are so many similarities between Rajini & Apple's Iconic products like iPods & iPhones. Like Apple, Rajini is also a Niche Star who has got Niche as well as Mass audience - something similar to iPods & iPhones, which are trend-setters & game-changers in their respective industries. One example being, people queueing up days in advance in front of stores just to get their hands on the Apple gadgets on Day 1. This is something which happens only to Rajini & his movies when people all across the world - from a Management/Tech Graduate/ Executive to a Daily Wage earner - queueing up to book their tickets in advance to watch him in action - preferably FDFS.

Hope you don't mind my long & hard-hitting reply.

Arun

R.Gopi said...

//Kamal, over & above his urge to show-case his "talents" (whatever that may be), should also, at least once in a while, take into consideration, the viewers' interests & likes & dislikes. Then, only then, his so-called 'class' will be recognised. Till then, his 'class' has to be confined to a 'class room' only.//

அருண்ஜி...... இது ஒரு அதிரடி பதில்..... அதுவும் இந்த வரி.... சான்ஸ் இல்ல ஜி....

(Till then, his 'class' has to be confined to a 'class room' ஒன்லி)

//people queueing up days in advance in front of stores just to get their hands on the Apple gadgets on Day 1. This is something which happens only to Rajini & his movies when people all across the world -/

மிக மிக சரி அருண்ஜி..... இதை, சிவாஜி படத்தின் போது, நான் கண்கூட துபாயில் (நம்புங்க துபாயில்தான்...) பார்த்தேன்...... 10 பேர் கூட படம் பார்க்க வராத நிலையில், சிவாஜி ரிலீசின் போது, ஒருவருக்கு 5 டிக்கட் மட்டும் என்று போர்ட் எழுதி வைத்தார்கள்..... ஆடியோ கேசட் மற்றும் சி.டி.க்கள் விற்று தீர்ந்தன......

ஒன்று இருக்கு ஜி...... கமல் மேக்கப்பை மட்டுமே சமீப காலமாக நம்புகிறார்.... அவர் அதை விடுத்து, நல்ல கதைகளையும், டைரக்டர்களையும் நம்பினால், மீண்டும் ஒரு மூன்றாம் பிறை அல்லது சலங்கை ஒலி வரலாம்......

R.Gopi said...

என் முந்தைய பின்னோட்டத்தில் ஒரு வரி விட்டு போய் விட்டது..... அதை சரி செய்து, இதோ வெளியிடுகிறேன்....

////people queueing up days in advance in front of stores just to get their hands on the Apple gadgets on Day 1. This is something which happens only to Rajini & his movies when people all across the world -/

மிக மிக சரி அருண்ஜி..... இதை, சிவாஜி படத்தின் போது, நான் கண்கூட துபாயில் (நம்புங்க துபாயில்தான்...) பார்த்தேன்...... சாதாரணமாக, துபாயில் ரிலீசாகும் பல படங்களை, 50௦-60 பேர் கூட படம் பார்க்க வராத நிலையில், சிவாஜி படத்தின் ரிலீசின் போது, ஒருவருக்கு 5 டிக்கட் மட்டும் என்று தியேட்டரில் போர்ட் எழுதி வைத்தார்கள், அவ்வளவு டிமான்ட்...... ஆடியோ கேசட் மற்றும் சி.டி.க்கள் ரிலீசான உடனே விற்று தீர்ந்தன......

ஒன்று இருக்கு அருண்ஜி...... கமல் மேக்கப்பை மட்டுமே சமீப காலமாக நம்புகிறார்.... அவர் அதை விடுத்து, நல்ல கதைகளையும், டைரக்டர்களையும் நம்பினால், மீண்டும் ஒரு மூன்றாம் பிறை அல்லது சலங்கை ஒலி வரலாம்......//

kppradeep said...

Dear Arun Sir,
Dhanush said in an interview that i can easily make the audience cry- meaning having a sober uninteresting look, crying like the ladies(when the hubby refuses to buy her anything under the roof)and show casting poverty,whorehouses and portraying a mentally challenged person on the screen is what all arivu jeevis (for ex yugi sethu one of the self proclaimed cine expert)call as class act.
Stupidity that a person who has been in film world for 50 years cannot read the pulse of the people and always telling the same old line-This movie has come ten to fifteen years earlier.Not all can have same learning curve but it seems for kamal sir it is not going to end.A really long long learning curve.
It is easy to make a movie with reality, logic but very very difficult to make a masala movie where you have to tell the same story in a new form with good screenplay so that both the producer and the podhujanam are laughing and not crying as in an off beat movie.
GOOD ONE SIR

rdharma said...

Arun good one again, especially your explanation on Class, even I don't really know the meaning of this word.There is one another thing, if some one is able to catch or mesmerize so manay people with his acting then he ought to be the best actor and I can't agree with some people who keep claiming that Rajini is a mass hero etc.

Gopi
//ஒன்று இருக்கு ஜி...... கமல் மேக்கப்பை மட்டுமே சமீப காலமாக நம்புகிறார்.... அவர் அதை விடுத்து, நல்ல கதைகளையும், டைரக்டர்களையும் நம்பினால், மீண்டும் ஒரு மூன்றாம் பிறை அல்லது சலங்கை ஒலி வரலாம்......
//

Andha DVD ellam marupadyum parthi thirupthi pattu kolla vendyathu than, innoru Nayagano neengal sonna padangalo varum endra nambikkai enakku illai

Prabhu said...

//இந்திய வெளியுறவு அலுவலக அதிகாரிகள் நேரில் வந்து உன்னை மீட்டெடுக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட "உலகம் அறியா நாயகன்" நீ என்ற உண்மையை உலகம் அன்று உணர்ந்தது//

Neenga yen avlo dhooram poganum... Delhi, mumbai laiye KAMAL nna yaarunnu theriyathu... apparom eppadinnnga USA la Canada la irukkira appavigalukku theriyum... Superstar pera solli paarunga.. chinna kuzhandhai kooda sollum.. Athan Mass, Class .. he is our BOSS..

ANANTH MURALI said...

Dear Arunachalam,

You have againg displayed your aversion ( obsession ) with Kamal. Fans of Kamal like me get a chance to know the good & bad things about Kamal regularly by reading your Blog. We know how to take your ridicule in our stride and we are not unduly bothered about press. You say Kamal is down and out and derive saddistic pleasure and in the same vein sometimes you lament why people still are not condemning Kamal or how he is still in the market. As you rightly said Market determines everything and if Kamal wants a share in the profits only and the producer agrees for that deal please do not lament. I also sometimes wonder whether you are in some kind of mental conflict. You were an ardent Kamal Fan like me initially before you switched over to Rajini in 1980. I feel there is still a soft spot in you for Kamal and in order to reinforce your current stand and justify your own conscience you go for all bad things about Kamal and pour venom on him and praise you Star. Otherwise how do you justify spending so much of your time and energy on Kamal, who in you words is not worthy of any praise or fame or market. Or do you think that Kamal is some kind of a terrorist who should be brought to books? Then your Super Star can enter politics, become CM and put an end to the Kamal menace. - Anantharam

senthil said...

gud one man :-)

senthil said...

Ulaga Ariyaa nayagan :-) hahaha

M Arunachalam said...

RK, Gopi, Dr. Pradeep, Dharma, Prabhu & Senthil - Thanks to you all for visiting my blog & commenting.

M Arunachalam said...

அனந்தராமன் அய்யா,

உங்க வருகைக்கு ரொம்ப நன்றிங்க அய்யா. என்னடா இன்னும் ஆளையே காணமேன்னு நினைச்சேன். இப்போ வந்துட்டீங்கய்யா! வந்துட்டீங்கய்யா!!

//You have againg displayed your aversion (obsession) with Kamal.//
Aversion - Yes. Obsessive? - No. May be, you can say I am "obsessively averse" to Kamal. Its fine with me.

//Fans of Kamal like me get a chance to know the good & bad things about Kamal regularly by reading your Blog.//
Chance to know "Good" things about Kamal in my blog? எனக்கு தெரிஞ்ச வரையில் நான் அப்படி எதுவும் தப்பு பண்ணியதாக நினைவு இல்லை. குறிப்பிட்டு சொன்னால் உடனே அந்த தவறை நீக்கி விடுகிறேன். இப்ப திருப்திதானே?

//We know how to take your ridicule in our stride//
ஒரு கமல் fan க்கு இவ்வளோ maturityயா? உலக அதிசயம் No.8 இதுவாத்தான் இருக்க போகுது.

//we are not unduly bothered about press.//
Do you have any other choice? வேற வழி?

//You say Kamal is down and out and derive saddistic pleasure//
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் இது.

//sometimes you lament why people still are not condemning Kamal//
சமூக அக்கறை தான். வேற என்ன?

//or how he is still in the market//
இனிமே அந்த கேள்வி கேக்கவே முடியுமோ முடியாதோ தெரியலையே? மனுஷன் மார்கேட்லயே இல்லைன்னா கேள்வி எப்பிடி கேக்குரதாம்?
(அனந்து - நீ காமெடி, கீமெடி பண்ணலியே? அது market வியாபாரம் செல்லம். படம் தானே வித்தாதான் உண்டு. விக்கலைனா பொத்திக்கிட்டு இருக்கணும்.)

//if Kamal wants a share in the profits only//
ஒரு தமிழ் 'பழமொழி'(?) நினைவுக்கு வந்து தொலைக்குது. "ஆசை இருக்கு தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க".

//and the producer agrees for that deal//
மொட்டை. தயாரிப்பாளருக்குதான். ஆமாம், ஏன் இந்த கொலை வெறி தயாரிப்பாளருங்க மேல?

//please do not lament//
ஐயோ! நான் எதுக்கு அழறேன்? அந்த தற்கொலை பண்ணிகொள்ளபோகிற தயாரிப்பாளரோட குடும்பமாச்சு, போலீஸ் ஆச்சு. இதுல எனக்கு என்ன வந்தது?

//I also sometimes wonder whether you are in some kind of mental conflict.//
mental எல்லாம் கமல் ரசிகருங்கதான். orkut கமல் community க்கு போய் பாத்தா விளங்கும், mental case எல்லாம் எங்க குந்திக்கினு கீதுங்கன்னு.

//You were an ardent Kamal Fan like me initially before you switched over to Rajini in 1980.//
வாழ்க்கைல தப்பு பண்ண ஒருத்தன் திருந்தவே கூடாதுங்களா?

//I feel there is still a soft spot in you for Kamal//
I agree. I am an animal lover.

//you go for all bad things about Kamal and pour venom on him//
ஏதோ என்னால் ஆன சமூக சேவை. ஏற்கெனவே நான் சொன்னபடி, "என் கடன் (கமலை) கிண்டல் செய்து கிடப்பதே". நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி. அடிக்கடி கேக்க கூடாது, புரியுதா?

//do you think that Kamal is some kind of a terrorist//
ஆஹா! சொல்லலாமே! அப்படியும் சொல்லலாமே!!! அவரு ஒரு கலாசார தீவிரவாதிதானே (cultural terrorist)?
அய்யா! ரொம்ப நன்றிங்கய்யா!! கமலுக்கு எதிராக point எடுத்து குடுக்கறதுக்கு. (என்கிட்டே மட்டும் ரகசியமா சொல்லறது - நீங்க நெசமாலுமே கமல் ரசிகருங்களாய்யா? இல்லாக்காட்டி ......... ம்ம் புரியுது.. புரியுது...)

//Then your Super Star can enter politics, become CM and put an end to the Kamal menace.//
கொசுவ அடிக்க AK-47 துப்பாக்கி எதுக்குங்க ஐயா? கொசுவே, தானாகவே (சினிமா படம் எடுத்தே) அழிஞ்சு போயிடும்.

வரட்டுங்களாய்யா! எனக்கு தெரியும் நீங்களும், உங்களை போலவே மத்த ரசிகருங்களும் இனிமே அடிக்கடி இங்க வந்து "கமலார்ச்சனை" நடப்பதை பாப்பீங்கன்னு. ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். உங்களை நான் கண்டிப்பா ஏமாத்தவே மாட்டேன்.

RK said...

அருண் அய்யா, சபாஷ் சரியான பதில்.

விஜயிடம் இருந்து ஏன் பதில் இல்லை. விஜய், விஜய் ......??

For Kamal fans - If you people still like him, kindly ask him (Kamal) to act for people instead himself. If he starts this principle atleast from 51st year (in the industry), his fans (POOR PEOPLE) can show their face infront of the Super star fans.

RK

ganeshtheboss said...

hi arun sir,

this is the best postin your blog...........

all the info mentioned are facts abt kamal...

grt post.....

kppradeep said...

Dear Arunji,
Good reply to your childhood pal.
கொசுவ அடிக்க AK-47 துப்பாக்கி "எதுக்குங்க ஐயா? கொசுவே, தானாகவே (சினிமா படம் எடுத்தே) அழிஞ்சு போயிடும்"
கொசுவ அடிச்சி கொலைகாரன் பட்டம் வேண்டாமே
pradeep

EE RAA said...

எனக்கு கமலையும் திரையில் பிடிக்கும்..

ஆனாலும் உங்கள் பதில்கள் என்னை கடுமையாய் சிரிக்க வைத்தது...

பாசகி said...

//எனக்கு கமலையும் திரையில் பிடிக்கும்..

ஆனாலும் உங்கள் பதில்கள் என்னை கடுமையாய் சிரிக்க வைத்தது...//

பல ரீப்பிட்டு :)

ஜி அதுவுல்லாம சூப்பரா வாதாடறீங்க. நீங்க என்ன வக்கீலா :)

Sampathkumar said...

Naan Aaandvan kitta vendardhu ellam "Kamal Pola Oruvan" namma boomila thirumba porakka koodaadhu. Namma ooru thaangadhu.. ;))))

Gr8 Post Arun-ji :)

Sampathkumar said...

I looked at the comments after posting my first comment. NETHIYADI.. Idhathaan "Annamalai Punch" sorry "Arunachalam Punch"nu solluvaangala ;)

Indha Komali fans paavam.. Thhanaa vandhu valaila vuzuvaraanunga..

Sampathkumar said...

Also i wnat to high;ight one more point. Dasavatharam had to be post poned due to Vijay's sooper doper hit Kuruvi.. hehe. Namma Vizaa Nayagan tholla thaangamudiyalada saami..

Kameswara Rao said...

Oh Arun after a long time nice read
Your reply to Kamaaal Rasigan (intentional written as Kamaal) was really nice, and gopi's comments about kamaal 100% write ee.raa always has a soft corner for all (being a poet basically)

Keep posting

Kamesh